QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة الإنشقاق

Surah Al-Inshiqaq in Tamil

25 ayat · Meccan · Surah 84 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾

84:1 வானம் பிளந்துவிடும் போது,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾

84:2 அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾

84:3 . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾

84:4 . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾

84:5 அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ ﴿٦﴾

84:6 மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

84:7 ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ﴿٨﴾

84:8 அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿٩﴾

84:9 இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿١٠﴾

84:10 ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا ﴿١١﴾

84:11 நாசமே! என அவன் கூவுவான்.

وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

84:12 "சயீர்' என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿١٣﴾

84:13 நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

84:14 நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ﴿١٥﴾

84:15 ஏனில்லை! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

84:16 ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

84:17 இரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

84:18 சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ﴿١٩﴾

84:19 ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

84:20 ஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١﴾

84:21 அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

84:22 மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

84:23 அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

84:24 ஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿٢٥﴾

84:25 (அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.

Do you really know Surah Al-Inshiqaq by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah Al-Inshiqaq from all 90 reciters →