QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة النازعات

Surah An-Nazi'at in Tamil

46 ayat · Meccan · Surah 79 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا ﴿١﴾

79:1 (தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!

وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا ﴿٢﴾

79:2 (நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!

وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا ﴿٣﴾

79:3 நீந்துவோர் மீது சத்தியமாக!

فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا ﴿٤﴾

79:4 (இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا ﴿٥﴾

79:5 காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்.)

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾

79:6 பூமி(யும் மலையும் பலமாக) அதிர்ச்சியுறுகின்ற நாளில்...

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾

79:7 பின்தொடரக்கூடியது அதைத் தொடரும்

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ﴿٨﴾

79:8 அந்நாளில், (சில) உள்ளங்கள் நடுங்கும்.

أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ ﴿٩﴾

79:9 அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கும்.

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ﴿١٠﴾

79:10 (நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’

أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً ﴿١١﴾

79:11 (அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?

قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ﴿١٢﴾

79:12 அவ்வாறாயின், அது நஷ்டமான திரும்புதல் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள்.

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ ﴿١٣﴾

79:13 (மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் (சப்தம்) தான்.

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾

79:14 அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾

79:15 (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾

79:16 “துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾

79:17 ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறினான்.

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾

79:18 நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ﴿١٩﴾

79:19 இன்னும், உன் இறைவனின் பக்கம் நான் உனக்கு நேர்வழி காட்டுவதற்கு (உனக்கு விருப்பமா)? ஆகவே, நீ (அவனைப்) பயந்து கொள்வாய்.

فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ﴿٢٠﴾

79:20 (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.

فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾

79:21 ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ﴿٢٢﴾

79:22 பிறகு (நிராகரிப்பில் மேலும்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.

فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾

79:23 இன்னும் (மக்களை) ஒன்று சேர்த்து கூவி அழைத்தான்.

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ﴿٢٤﴾

79:24 நான் தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ﴿٢٥﴾

79:25 ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான்.

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ ﴿٢٦﴾

79:26 (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ﴿٢٧﴾

79:27 (மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அதை (-வானத்தை) அமைத்தான்.

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾

79:28 அதன் முகட்டை உயர்த்தினான், இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்.

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾

79:29 இன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾

79:30 இன்னும் பூமியை அதன் பின்னர், (அதை) விரித்தான்.

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ﴿٣١﴾

79:31 அதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ﴿٣٢﴾

79:32 இன்னும் மலைகளை (அதில் அவற்றை) நிறுவினான்.

مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ﴿٣٣﴾

79:33 உங்களுக்கும் இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றைப் படைத்தான்).

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ﴿٣٤﴾

79:34 ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾

79:35 மனிதன் தான் செய்ததை நினைத்துப் பார்க்கின்ற (அந்)நாளில்,

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾

79:36 (அந்நாளில்) காண்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும்.

فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾

79:37 ஆகவே, யார் வரம்பு மீறினானோ,

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿٣٨﴾

79:38 இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٣٩﴾

79:39 நிச்சயமாக நரகம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ﴿٤٠﴾

79:40 ஆகவே, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தீய) இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٤١﴾

79:41 நிச்சயமாக சொர்க்கம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ﴿٤٢﴾

79:42 (நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ﴿٤٣﴾

79:43 (எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾

79:44 உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு (இருக்கிறது).

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ﴿٤٥﴾

79:45 (நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுகிறவரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர அது வரும் காலத்தை அறிவிப்பவரல்ல.)

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ﴿٤٦﴾

79:46 அதை அவர்கள் (கண்ணால்) காணுகின்ற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில் அவர்கள்) தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத் தோன்றும்).

Do you really know Surah An-Nazi'at by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah An-Nazi'at from all 90 reciters →