بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا ﴿١﴾
77:1 தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا ﴿٢﴾
77:2 அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا ﴿٣﴾
77:3 (மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا ﴿٤﴾
77:4 (உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا ﴿٥﴾
77:5 (நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
عُذْرًا أَوْ نُذْرًا ﴿٦﴾
77:6 (அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ﴿٧﴾
77:7 நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ﴿٨﴾
77:8 நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ﴿٩﴾
77:9 வானம் பிளக்கப்படும் போது,
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ﴿١٠﴾
77:10 மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ﴿١١﴾
77:11 தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ﴿١٢﴾
77:12 எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
لِيَوْمِ ٱلْفَصْلِ ﴿١٣﴾
77:13 (ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ﴿١٤﴾
77:14 தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿١٥﴾
77:15 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ﴿١٦﴾
77:16 (நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ ﴿١٧﴾
77:17 பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ﴿١٨﴾
77:18 இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿١٩﴾
77:19 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ﴿٢٠﴾
77:20 பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ ﴿٢١﴾
77:21 உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ﴿٢٢﴾
77:22 குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ ﴿٢٣﴾
77:23 நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٤﴾
77:24 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ﴿٢٥﴾
77:25 பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?
أَحْيَآءً وَأَمْوَٰتًا ﴿٢٦﴾
77:26 (பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا ﴿٢٧﴾
77:27 அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٨﴾
77:28 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢٩﴾
77:29 நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ ﴿٣٠﴾
77:30 மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ﴿٣١﴾
77:31 அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ ﴿٣٢﴾
77:32 நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ ﴿٣٣﴾
77:33 அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٤﴾
77:34 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ﴿٣٥﴾
77:35 இது அவர்கள் பேசாத நாளாகும்.
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ﴿٣٦﴾
77:36 அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٧﴾
77:37 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ ﴿٣٨﴾
77:38 இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ﴿٣٩﴾
77:39 உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٠﴾
77:40 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ ﴿٤١﴾
77:41 நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿٤٢﴾
77:42 இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾
77:43 நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿٤٤﴾
77:44 நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٥﴾
77:45 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ﴿٤٦﴾
77:46 (இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٧﴾
77:47 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ﴿٤٨﴾
77:48 தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٩﴾
77:49 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ﴿٥٠﴾
77:50 இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!