QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة الواقعة

Surah Al-Waqi'ah in Tamil

96 ayat · Meccan · Surah 56 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿١﴾

56:1 நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ﴿٢﴾

56:2 அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.

خَافِضَةٌ رَّافِعَةٌ ﴿٣﴾

56:3 (அது பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியது. (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியது.

إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا ﴿٤﴾

56:4 பூமி பலமாக குலுக்கப்பட்டால்,

وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا ﴿٥﴾

56:5 மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,

فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا ﴿٦﴾

56:6 பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.

وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً ﴿٧﴾

56:7 நீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடுவீர்கள்.

فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿٨﴾

56:8 அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?

وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿٩﴾

56:9 துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?

وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ ﴿١٠﴾

56:10 (உலகில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.

أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ﴿١١﴾

56:11 அவர்கள் (அல்லாஹ்வின் அருகில்) மிக நெருக்கமானவர்கள்.

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿١٢﴾

56:12 “நயீம்” இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿١٣﴾

56:13 முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).

وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ﴿١٤﴾

56:14 இன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).

عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ﴿١٥﴾

56:15 ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்)

مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ ﴿١٦﴾

56:16 அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ ﴿١٧﴾

56:17 அவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,

بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ﴿١٨﴾

56:18 குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ﴿١٩﴾

56:19 அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.

وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾

56:20 அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ﴿٢١﴾

56:21 அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).

وَحُورٌ عِينٌ ﴿٢٢﴾

56:22 வெண்மையான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).

كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ﴿٢٣﴾

56:23 அவர்கள் பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿٢٤﴾

56:24 அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு கூலியாக (இந்த அருள்கள் அவர்களுக்கு கிடைக்கும்).

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ﴿٢٥﴾

56:25 அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.

إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا ﴿٢٦﴾

56:26 சலாம், சலாம் என்ற பேச்சைத் தவிர (வேறு பேச்சை செவியுற மாட்டார்கள்).

وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ ﴿٢٧﴾

56:27 வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!

فِى سِدْرٍ مَّخْضُودٍ ﴿٢٨﴾

56:28 அவர்கள், முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகில் இருப்பார்கள்;

وَطَلْحٍ مَّنضُودٍ ﴿٢٩﴾

56:29 இன்னும், குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகில் இருப்பார்கள்.

وَظِلٍّ مَّمْدُودٍ ﴿٣٠﴾

56:30 இன்னும், நீங்காத நிழல்களில் இருப்பார்கள்;

وَمَآءٍ مَّسْكُوبٍ ﴿٣١﴾

56:31 இன்னும், ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகில் இருப்பார்கள்.

وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ ﴿٣٢﴾

56:32 இன்னும், அதிகமான பழங்களுக்கு அருகில் இருப்பார்கள்.

لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ﴿٣٣﴾

56:33 அவை தீர்ந்துவிடாது, தடுக்கப்படாது.

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ﴿٣٤﴾

56:34 இன்னும் உயர்வான விரிப்புகளில் இருப்பார்கள்.

إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً ﴿٣٥﴾

56:35 அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்.

فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا ﴿٣٦﴾

56:36 அவர்களை நாம் (எப்போதும்) கன்னிப் பெண்களாக ஆக்குவோம்.

عُرُبًا أَتْرَابًا ﴿٣٧﴾

56:37 கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.

لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٣٨﴾

56:38 வலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿٣٩﴾

56:39 (வலப் பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்.

وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ﴿٤٠﴾

56:40 இன்னும் பின்னோரிலும் அதிகமானவர்கள் ஆவர்.

وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ ﴿٤١﴾

56:41 இடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?

فِى سَمُومٍ وَحَمِيمٍ ﴿٤٢﴾

56:42 கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,

وَظِلٍّ مِّن يَحْمُومٍ ﴿٤٣﴾

56:43 கரும் புகையின் நிழலிலும் (அவர்கள் இருப்பார்கள்).

لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ﴿٤٤﴾

56:44 (இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.

إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ﴿٤٥﴾

56:45 இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) சுகவாசிகளாக இருந்தனர்.

وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ﴿٤٦﴾

56:46 பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.

وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ﴿٤٧﴾

56:47 “நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக (இந்த நிலைக்கு நாங்கள் மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து) நாங்கள் எழுப்பப்படுவோமா?

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴿٤٨﴾

56:48 முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?

قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ ﴿٤٩﴾

56:49 (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ﴿٥٠﴾

56:50 (அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ﴿٥١﴾

56:51 பிறகு, பொய்ப்பிக்கின்ற வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ﴿٥٢﴾

56:52 “சக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.

فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ﴿٥٣﴾

56:53 அதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.

فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ﴿٥٤﴾

56:54 அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.

فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ﴿٥٥﴾

56:55 தாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.

هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ﴿٥٦﴾

56:56 இதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.

نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ﴿٥٧﴾

56:57 நாம்தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?

أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ﴿٥٨﴾

56:58 நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!

ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ ﴿٥٩﴾

56:59 அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகுகின்ற குழந்தையையும்) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைப்பவர்களா?

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿٦٠﴾

56:60 நாம் தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (யார் யாருக்கு எப்போது மரணம் வரும் என்று) நிர்ணயித்தோம். நாங்கள் முடியாதவர்கள் (இயலாதவர்கள்) இல்லை,

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ﴿٦١﴾

56:61 உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).

وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ﴿٦٢﴾

56:62 முதல் முறை படைத்திருப்பதை (அதை செய்தவன் யார் என்பதை) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். (இதன் மூலம்) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ﴿٦٣﴾

56:63 நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கின்றீர்களே அதைப் பற்றி அறிவியுங்கள்!

ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ﴿٦٤﴾

56:64 அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் முளைக்க வைக்கின்றோமா?

لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ﴿٦٥﴾

56:65 நாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.

إِنَّا لَمُغْرَمُونَ ﴿٦٦﴾

56:66 “நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)

بَلْ نَحْنُ مَحْرُومُونَ ﴿٦٧﴾

56:67 “மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் நீங்கள் உங்களைப் பற்றி கூறுவீர்கள்).

أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ﴿٦٨﴾

56:68 நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!

ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ﴿٦٩﴾

56:69 அதை கார்மேகத்தில் இருந்து நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை மேகத்தில் இருந்து) இறக்குகின்றவர்களா?

لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٧٠﴾

56:70 நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். நீங்கள் (இந்த மா பெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நன்றிசெலுத்த வேண்டாமா?

أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ﴿٧١﴾

56:71 நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!

ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ﴿٧٢﴾

56:72 அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?

نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ ﴿٧٣﴾

56:73 நாம் அதை (-அந்த உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு ஒரு பலனாகவும் ஆக்கினோம்.

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿٧٤﴾

56:74 ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!

۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿٧٥﴾

56:75 (தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ﴿٧٦﴾

56:76 நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாகும்.

إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ ﴿٧٧﴾

56:77 நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்.

فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ ﴿٧٨﴾

56:78 (அது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.

لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ﴿٧٩﴾

56:79 மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿٨٠﴾

56:80 (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.

أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ﴿٨١﴾

56:81 இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கின்றீர்களா?

وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ﴿٨٢﴾

56:82 நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ﴿٨٣﴾

56:83 (மரணிக்கின்றவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது நீங்கள் (அதை) தடுத்திருக்க வேண்டாமா!

وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ﴿٨٤﴾

56:84 நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கின்றீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ ﴿٨٥﴾

56:85 நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக அருகில் இருக்கின்றோம். என்றாலும் நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும் போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)

فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿٨٦﴾

56:86 நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,

تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٨٧﴾

56:87 (இந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?

فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ﴿٨٨﴾

56:88 ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,

فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ﴿٨٩﴾

56:89 (அவருக்கு மறுமையில்) இறையருளும் (நல்ல) உணவும் “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.

وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٩٠﴾

56:90 ஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,

فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٩١﴾

56:91 (ஓ நல்லவரே!) வலப்பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு சலாம் உண்டாகட்டும்.

وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿٩٢﴾

56:92 ஆக, (இறந்த) அவர் வழிகெட்டவர்களான பொய்ப்பித்தவர்களில் (ஒருவராக) இருந்தால்,

فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ﴿٩٣﴾

56:93 கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின் விருந்தும்

وَتَصْلِيَةُ جَحِيمٍ ﴿٩٤﴾

56:94 நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).

إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ﴿٩٥﴾

56:95 நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿٩٦﴾

56:96 ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!

Do you really know Surah Al-Waqi'ah by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah Al-Waqi'ah from all 90 reciters →