بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا ﴿١﴾
100:1 மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا ﴿٢﴾
100:2 இன்னும் தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا ﴿٣﴾
100:3 இன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا ﴿٤﴾
100:4 இன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾
100:5 இன்னும் அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ ﴿٦﴾
100:6 நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ﴿٧﴾
100:7 நிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾
100:8 நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾
100:9 புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾
100:10 இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன் அறியவேண்டாமா)?
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ ﴿١١﴾
100:11 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.