QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة الغاشية

Surah Al-Ghashiyah in Tamil

26 ayat · Meccan · Surah 88 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ﴿١﴾

88:1 (நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?

وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ﴿٢﴾

88:2 (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.

عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾

88:3 (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)

تَصْلَىٰ نَارًا حَامِيَةً ﴿٤﴾

88:4 (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ ﴿٥﴾

88:5 கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ﴿٦﴾

88:6 அவற்றுக்கு (- அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ ﴿٧﴾

88:7 (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ﴿٨﴾

88:8 (நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;

لِّسَعْيِهَا رَاضِيَةٌ ﴿٩﴾

88:9 தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.

فِى جَنَّةٍ عَالِيَةٍ ﴿١٠﴾

88:10 (அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.

لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً ﴿١١﴾

88:11 அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ﴿١٢﴾

88:12 அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ ﴿١٣﴾

88:13 அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ﴿١٤﴾

88:14 இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ﴿١٥﴾

88:15 இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾

88:16 இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾

88:17 (அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿١٨﴾

88:18 இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾

88:19 இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப்பட்டுள்ளது? என்று

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾

88:20 இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ﴿٢١﴾

88:21 ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿٢٢﴾

88:22 அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

88:23 எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿٢٤﴾

88:24 அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿٢٥﴾

88:25 நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾

88:26 பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)

Do you really know Surah Al-Ghashiyah by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah Al-Ghashiyah from all 90 reciters →